புள்ளி அலகு வாத்து, இதன் ஆங்கில பெயர் Indian Spot-billed Duck மற்றும் அறிவியல் பெயர் Anas poecilorhyncha.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் காணப்படும் வலசை செல்லாதப் பறவை இனம்.
நம்மைச் சுற்றியுள்ளப் பறவை இனங்களில் இதுவும் ஒன்று. எங்கே பார்க்க முடியும் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. சரி சொல்கிறேன், விவசாய நிலங்களில் பார்க்கலாம், சதுப்பு நிலப் பகுதிகளிலும் பார்க்கலாம் மற்றும் நன்னீர் ஏரிகளிலும் பார்க்கலாம்.
வாத்துகள் பொதுவாக எல்லாம் ஒன்று போலவே இருக்கும் எப்படி புள்ளி அலகு வாத்து என்று அடையாளம் காண்பது, ஆம் ஒவ்வொரு இன பறவைகளை அடையாளம் காண ஒரு சில வழிகள் உண்டு. அது போல் புள்ளி அலகு வாத்தை அடையாளம் காண
அலகின் பாதியிலிருந்து மஞ்சள் நிறத்திலும் மற்றும் நுனியில் கருப்பு புள்ளி ஒன்று இருக்கும் மற்றும் நாசியின் மேலே சிவப்பு நிறப்புள்ளிகள் இருக்கும். இந்த அடையாளங்களே போதுமானதாக இருக்கும்.
பறவை நோக்குதல் ஓர் அற்புதமான பொழுதுபோக்கு. நான் குறிப்பிட்ட இடத்திற்குப் போக நேர்ந்தால் நிச்சயம் புள்ளி அலகு வாத்துக்களை நோக்குங்கள், பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
நன்றி அடுத்தப் பறவை அறிதலில் சந்திப்போம்.
த.மொய்தீன்.


கருத்துகள்
கருத்துரையிடுக